ஊரடங்கின்போது வாரச்சந்தை: சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்

ஆர்.கே.பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் குவிந்தனர்.
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று திடீரென்று வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் வியாபாரிகள் அதிக அளவில் கடைகளை நடத்தினர். இதனால் ஆர்.கே.பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாரச்சந்தை நடைபெற்றது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com