மேற்கு வங்காள சட்டசபை இடைத்தேர்தல்; இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இடதுசாரி கட்சி அறிவித்து உள்ளது.
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்து உள்ளது.

அதன்படி, தின்ஹடா தொகுதியில் உதயன் குஹா, சாந்திப்பூர் தொகுதியில் பிராஜ் கிஷோர் கோஸ்வாமி, கர்தஹா தொகுதியில் சோபன்தேவ் சட்டோபாத்யாய் மற்றும் கொசாபா தொகுதியில் சுப்ரதா மொண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இடது சாரி கட்சி இன்று அறிவித்து உள்ளது. இதன்படி, தின்ஹடா தொகுதியில் அப்துர் ராப், சாந்திப்பூர் தொகுதியில் சவுமென் மகதோ, கர்தஹா தொகுதியில் தேபஜோதி தாஸ் மற்றும் கொசாபா தொகுதியில் அனில் சந்திர மண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com