வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்த நடிகர் சாயாஜி ஷிண்டே சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

புனே வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை நடிகர் சாயாஜி ஷிண்டே அணைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Published on

புனே,

மராத்தி பட உலகில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படத்தில் நடித்து உள்ளார். இவர் நேற்று புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆதரவாளர்களுடன் காரில் புறப்பட்டுசென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் மும்பை நோக்கி புறப்பட்டு வந்தார்.

அந்த கார் மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள கோத்ரஜ் அருகேவந்த போது வனப்பகுதியில் இருந்த புதர்கள் மற்றும் புற்களில் தீ பற்றி எரிவதை கண்டார்.

உடனடியாக அவர் காரை நிறுத்தி தனது ஆதரவாளர்களுடன் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் 50 மீட்டர் பரப்பளவில் பற்றி எரிந்த தீயை, அங்குள்ள மரத்தின் கிளைகளை உடைத்து தீயின் மீது அடித்து அணைத்தார். எனினும் தொடர்ந்து கரும்புகை வந்துகொண்டிருந்ததால், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

நடிகர் சாயாஜி ஷிண்டே தீயை அணைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com