ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி: உச்சநீதிமன்றம் கவலை

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி: உச்சநீதிமன்றம் கவலை
Published on

புதுடெல்லி,

கடன்கள் மற்றும் கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவது மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தள்ளி வைக்கப்பட்ட காலத்துக்கான வட்டியுடன் கட்டணங்களும் சேர்த்து அதற்கு வட்டி கணக்கிடப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தனர்.

வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், கடன்தவணை காலத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி விதிப்பது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஆறு மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா? என்பதைத் தீர்மானிக்க 3 நாட்களுக்குள் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியும் கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com