லண்டன்,
8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்னும் ஒரு லீக் சுற்று எஞ்சியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா (10 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த நிலையில் எஞ்சிய ஒரு அரைஇறுதி இடத்தை நிர்ணயிக்கும் வாழ்வா-சாவா? ஆட்டத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மித்தாலி ராஜ் 109, வேதா 70 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்துக்கு 266 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.