புதுச்சேரி,
புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இங்கு அலையின் போக்கில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால் துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகி படகு போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக ரூ.2 கோடி செலவில் முகத் துவாரம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் துறைமுகத் துறைக்கு சொந்தமான மணல்வாரி கப்பல் பயன்படுத்தப் படுகிறது.
60 ஆயிரம் கியூபிக் மீட்டர்
சுமார் 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இந்த பணியை 3 மாதத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தூர்வாரும் பணியின்போது அள்ளப்படும் மணல் ராட்சத பைப்கள் மூலம் தண்ணீருடன் எடுத்துசெல்லப்பட்டு வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் கொட்டப்படும். ஆனால் இந்த முறை அந்த மணல் வம்பாகீரப்பாளையம் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.