அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 அக உயர்வு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 அக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 அக உயர்வு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீயை கலிபோர்னியா கண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.

இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தின் சியாரா மலைப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் காட்டுத்தீயாக பதிவாகியுள்ளது. கடந்த 7 நாட்களில் இந்த காட்டுத்தீ 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரங்கள் தீயில் கருகியுள்ளன. கடந்த புதன் கிழமை அன்று பட் கவுண்டி பகுதியில் மூன்று பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவின் பட் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மேலும் 7 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் காட்டுத் தீயால் நகரை விட்டு வெளியேற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com