

ஹைதி,
கரீபியன் தீவு நாடான ஹைதியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை ஆதரவுடன் பாதுகாப்புப் படைப் பிரிவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி தலைநகர் பகுதியில் ரோந்து சென்ற எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 4 விமானப்படை வீரர்கள், பயங்கரவாத கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மாயமாகினர். அவர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து எல் சால்வடார் நாட்டு அதிபர் நயிப் புக்கேலே தனது நாட்டு வீரர்களை மீட்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். இதையடுத்து சுமார் 1,000 எல் சால்வடார் நாட்டு அதிரடிப் படை வீரர்கள் ஹைதி நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். இந்த அதிரடிப்படை குவிப்பு அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.