பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில்; 12 பயங்கரவாதிகள் பலி


பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில்; 12 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 7 Feb 2025 2:51 PM IST (Updated: 7 Feb 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பெஷாவர்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் மீதமுள்ள கிளர்ச்சியாளர்களின் இருப்பை ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story