சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் - 125 பேர் பாதிப்பு

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் - 125 பேர் பாதிப்பு
Published on

புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து கரீபியன் தீவுகளை நோக்கி "ரூபி பிரின்சஸ்" என்ற பிரமாண்ட சொகுசு கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான பயணியருடன் கடந்த மே மாதம் உற்சாகமாக புறப்பட்டது. பயணம் பாதியைக் கடந்த நிலையில், திடீரென சிலருக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

முதலில் உணவு நச்சுத்தன்மை என்று கருதப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கப்பல் ஊழியர்களில் சிலரும் இதில் பாதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக பரிசோதனை செய்ததில், இது மிக மோசமாக பரவக்கூடிய 'நோரோ வைரஸ்' தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அலாஸ்கா மற்றும் கனடாவுக்கு சென்ற "ரூபி பிரின்சஸ்" சொகுசு கப்பலில் திடீரென பரவிய "நோரோவைரஸ்" தொற்று 20 நாள் பயணத்தில் 102 பயணிகள் மற்றும் 23 பணியாளர்கள் என மொத்தம் 125 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நீக்கம் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com