சீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம்

சீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம்
Published on

சீனாவில் விசா இன்றி தங்கும் நடைமுறை மேலும் 2 விமான நிலையங்களில் அறிமுகம்பீஜிங்,

சீனா வழியாக செல்லும் பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி மற்ற நாட்டுக்கு செல்லும் பயணிகள் சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். மேலும் இதனை பயன்படுத்தி சீனாவை சுற்றியும் பார்க்க முடியும். இதன்மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது ஹெனான் மாகாணம் செங்சூ சின்செங் விமான நிலையம், யுனான் மாகாணம் லிஜாங் விமான நிலையம் மற்றும் அங்குள்ள துறைமுகத்திலும் இந்த விசா தளர்வு நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com