நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயிப்பதில் இரு பழங்குடியினரிடையே மோதல்: 15 பேர் பலி

நிலக்கரிச் சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக இரு பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக தகராறு நீடித்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹாட் மாவட்டத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் பகுதியில் சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு தரப்பிலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழங்குடியினருக்கு இடையேயான துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியது.

இதையடுத்து காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக தகராறு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com