பாகிஸ்தானில் டிக்-டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி சுட்டுக்கொலை

சுட்டுக்கொல்லப்பட்ட சனா யூசப் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
பாகிஸ்தானில் டிக்-டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி சுட்டுக்கொலை
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். இவர் பெண்கள் உரிமைகள், கல்வி குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் கருத்துகள், உள்ளிட்டவை பற்றி பதிவிட்டு வந்தார். அவரை சமூக வலைதளங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூன் 2) திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் சனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சனா ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். பின்னர், அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சும்பல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு அந்த நபர் சனா யூசப்புடன் பேசிக்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com