பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து : 19 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மலை பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Representative image - AFP (File)
Representative image - AFP (File)
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைபாதையில் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து காவல் உதவி ஆணையர் சையத் மெஹ்தாப் ஷா கூறுகையில், " இஸ்லாமாபாத்தில் இருந்து குவெட்டாவுக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, மலையின் கூர்மையான வளைவில் நெருங்கியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், இதுவரை 19 பேரில் உடல்களை மீட்டுள்ளோம்.

காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் " என்றார். கனமழையும், பேருந்து அதிவேகமாக இயக்கியதும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com