பஸ் மீது லாரி மோதி கோர விபத்து; 19 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மீது லாரி மோதி கோர விபத்து; 19 பேர் பலி
Published on

கெய்ரோ,

எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் இருந்து 22 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அஷ்மொன் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com