சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீனாவின் ஹூபே மாகாணம் யுஷான் பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. 5 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமான பாறைகள் அங்கு மூடி இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com