மியான்மரில் தேசிய நெடுஞ்சலையில் லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்

தேசிய நெடுஞ்சலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
மியான்மரில் தேசிய நெடுஞ்சலையில் லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்
Published on

நேபிடோ,

மியான்மரில் உள்ள யங்கூன்-மண்டலாய் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையின் ஓரம் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதனை கவனிக்காத மினி லாரி டிரைவர் லாரியின் பின்புறமாக மோதினார்.

இதில் மினி லாரியில் இருந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 11 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com