பாகிஸ்தானில் கொடூரம்: 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானில் கொடூரம்: 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் 23 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில் பேருந்து, டிரக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 23-பேர் பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com