பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு மற்றும் மத்திய பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. மேலும் பலத்த பனிப்பொழிவும் நிலவுகிறது. தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

தொடர் கனமழையால் மின்சாரம், சாலை போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 28 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com