ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - 4 பேர் பலி

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,544வது நாளாக நீடித்து வருகிறது.
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - 4 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,544வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தியது. தலைநகர் மாஸ்கோ, ஹிம்கி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 500க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 30 நாட்களில் ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய அளவிலான டிரோன் தாக்குதல் இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com