எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 30 பேர் படுகாயம்

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 30 பேர் படுகாயம்
Published on

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஷேகாபுரா ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்பு புரண்டன.

இந்த விபத்தில் ரெயில் பயணிகளில் 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com