பாகிஸ்தான் சிறையில் 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என தகவல்

பாகிஸ்தான் சிறையில் 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. #Indian #Pakistan
பாகிஸ்தான் சிறையில் 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என தகவல்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரகத்திடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கொடுத்து உள்ள தகவலில் 457 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் 2008 மே மாதம் 21-ம் தேதி கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்த ஷரத்துக்களின்படி இரு நாடுகளும் சிறைக்கைதிகள் தொடர்பாக தகவல்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு இரு முறை (ஜனவரி, ஜூலை மாதங்களில்) இருநாட்டு அதிகாரிகளும் சிறையில் உள்ள கைதிகள் தொடர்பாக பட்டியலை ஒப்படைக்கிறார்கள். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், 457 இந்திய சிறைக்கைதிகள் தகவல்களை அந்நாட்டு தூதரகத்திடம் ஒப்படைத்து உள்ளோம், அவர்களில் 58 பேர் சிவில் கைதிகள். 399 பேர் மீனவர்கள், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 18-ம் பாகிஸ்தான் 146 மீனவர்களை விடுதலை செய்யும் எனவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா சிறைக்கைதிகள் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டியது உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அரபிக்கடலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் தெளிவான எல்லை வரையறை இல்லாத நிலையில் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்தவர்கள் என இருநாட்டு படைகளும் மீனவர்களை கைது செய்து வருகிறது. மரப்படகுகள் எந்தஒரு தொழில்நுட்ப வசதியின்றி எல்லையை தாண்டி சென்றுவிடுகிறது, இவ்வாறு செல்லும் மீனவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com