அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி, ஒருவர் காயம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி, ஒருவர் காயம்
Published on

அலஸ்கா,

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள பனிப் படர்ந்த பகுதியான அன்க்ரோஜ் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார்.

ஹெலிகாப்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் நிக்கிளேசியர் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் அலஸ்கா மாகாண மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மீட்புகுழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பயணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com