வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகினர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகரான நாராயண்கஞ்ச் நகரில் இருந்து முனிஸ்கஞ்ச் மாவட்டத்துக்கு நேற்று காலை படகு ஒன்று புறப்பட்டு சென்றது. படகில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த படகு சார் சையத்பூர் நகருக்கு அருகே ஷீதல்அக்ஷயா ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு கப்பல் ஒன்று பயணிகள் படகு மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய படகு நீரில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். சுமார் 20 பயணிகள் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர்.

இதனிடையே இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இதில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com