பாகிஸ்தானில் ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொலை..!

பாகிஸ்தானில் ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொலை..!
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜாபராபாத் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டு தள்ளினர்.

இதில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஜாபராபாத் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com