அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 67 பேர் பலி

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட எத்தியோப்பிய பிரதமருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 67 பேர் பலியாகி உள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 67 பேர் பலி
Published on

அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா நாட்டில் பிரதமராக இருந்து வருபவர் அபை அகமது. இவருக்கு எதிராக ஜாவர் முகமது என்பவர் தலைமையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜாவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அகமது ஆரம்பகால சர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் அரசியலை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார்.

அவர் ஆட்சிக்கு வர உதவியாக இருந்த அவரது மிக நெருங்கிய கூட்டணியினர் கூட அவரது சில கொள்கைகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்க மறுத்து உள்ளனர். இந்நிலையில் கூட அவரது அரசியல் நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை நோக்கி செல்கின்றன என கூறியுள்ளார்.

எத்தியோப்பிய பிரதமர் அகமதுவுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அந்நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றும் ஜாவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அகமதுவுக்கு எதிராக கடந்த 2 நாட்களாக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் இரு தரப்பு பழங்குடி குழுக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. ஒருவரையொருவர் சிறியரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளால் தாக்கி கொண்டனர். இதில் 67 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com