மியான்மர் வன்முறையில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி என தகவல்

மியான்மரில் ஆகஸ்டு இறுதியில் ராணுவத்தின் கடும் நடவடிக்கையால் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
மியான்மர் வன்முறையில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி என தகவல்
Published on

யாங்கன்,

மியான்மர் நாட்டில் கடந்த ஆகஸ்டு 25ந்தேதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தப்பி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, ராணுவத்தின் இந்நடவடிக்கையை சிறுபான்மை முஸ்லிம் மக்களின் இன அழிப்பு நடவடிக்கை என கூறியுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை பற்றிய சரியான விவரங்களை வெளியிடவில்லை.

இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் வசிக்கும் 2,434 குடியிருப்புவாசிகளிடம் டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் குழுவாக சென்று ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஆய்வு மேற்கொண்டது.

இதுபற்றி அந்த குழுவின் மருத்துவ இயக்குநர் வாங் கூறும்பொழுது, மியான்மர் வன்முறையில் தப்பி பிழைத்தவர்கள் வங்காளதேசத்தில் நெருக்கடியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களை சந்தித்து நாங்கள் பேசினோம்.

இதில், 5 வயதிற்கு உட்பட்ட 730 குழந்தைகள் உள்பட 6,700 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இந்த படுகொலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த பலியானவர்கள் 69 சதவீதம் பேர் என ஆய்வு தெரிவிக்கின்றது.

வீடுகளின் உள்ளே வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்டவர்கள் 9 சதவீதம் பேர் மற்றும் கடுமையாக அடித்து தாக்கப்பட்டு பலியானவர்கள் 5 சதவீதம் பேர் என ஆய்வு தெரிவிக்கின்றது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 60 சதவீதம் பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.

எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ள மியான்மர் ராணுவம் 376 ரோஹிங்கியா தீவிரவாதிகள் உள்பட 400 பேர் முதல் சில வாரங்களில் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

ஆனால், ராணுவம் மற்றும் உள்ளூர் தீவிரவாதிகளால் ரோஹிங்கியா மக்கள் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளனர் என அதிக பலி எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆய்வு பணியில் ஈடுபட்ட குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com