அமெரிக்க பாடகர் ரியான் ஆடம்ஸ் மீது 7 பெண்கள் பாலியல் புகார்

அமெரிக்க பாடகர் ரியான் ஆடம்ஸ் மீது 7 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பாடகர் ரியான் ஆடம்ஸ் மீது 7 பெண்கள் பாலியல் புகார்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாடகர் ரியான் ஆடம்ஸ் (வயது 44). இவர் தனது இசைக்குழுவில் இடம் அளிப்பதாக கூறி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 6 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரியான் ஆடம்சிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவியும், பிரபல பாடகியுமான மாண்டி மூரேவும் அவர் மீது பாலியல் குற்றம்சாட்டை சுமத்தி உள்ளார்.

இது குறித்து ரியான் ஆடம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் ஒன்றும் சிறந்த மனிதன் கிடையாது. பல்வேறு தவறுகளை செய்துள்ளேன். வேண்டுமென்றே யாரையும் காயப்படுத்தி இருந்தால் தயக்கமின்றி, மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் சில தவறானவை என்றும், மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com