நியூயார்க் தாக்குதல் தீவிரவாதத்தின் கோழை செயல்: மேயர் பிளேசியோ

நியூயார்க்கில் லாரியை ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதி 8 பேரை பலி கொண்ட சம்பவத்தினை தீவிரவாதத்தின் கோழை செயல் என மேயர் பிளேசியோ கூறியுள்ளார்.
நியூயார்க் தாக்குதல் தீவிரவாதத்தின் கோழை செயல்: மேயர் பிளேசியோ
Published on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்தவர் பொதுமக்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

நியூயார்க் நகர போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். 29 வயது நிறைந்த அவரிடம் போலியான துப்பாக்கிகள் இருந்துள்ளன என தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் பற்றி கூறிய மேயர் பில் டீ பிளேசியோ, இது ஒரு தீவிரவாத செயல். ஒன்றுமறியாத பொதுமக்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட கோழைத்தனமிக்க தீவிரவாத செயல் என கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com