மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைய கடலில் நீந்தி ஆபத்தான பயணம் - 84 பேர் மீட்பு


மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைய கடலில் நீந்தி ஆபத்தான பயணம் - 84 பேர் மீட்பு
x
தினத்தந்தி 27 July 2025 2:59 PM IST (Updated: 27 July 2025 3:00 PM IST)
t-max-icont-min-icon

கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

மாட்ரிட்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின்போது சில நேரங்களில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், மொராக்கோ நாட்டில் இருந்து வட ஆப்பிரிக்கப் பகுதிக்கு அருகே அமைந்திருக்கும் ஸ்பெயின் நகரமான சியூட்டாவிற்குள் நுழைய, கடலில் நீந்தியவாரே 54 சிறுவர்கள் உள்பட 84 பேர் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஸ்பெயின் கடற்படையினர் பாதுகாப்பு ஏதும் இன்றி ஆபத்தான முறையில் கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். மீட்க்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை தற்காலிகமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story