

மாஸ்கோ,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3,79,01,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10,83,400 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,12,310 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 125 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 22,722 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,24,235 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,65,353 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (80,02,023 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (71,60,805 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (50,96,209 பேர்) உள்ளன.