ரஷ்யாவில் இன்று மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இன்று மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3,85,99,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10,94,074 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,40,409 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 239 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 23,205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 10,39,705 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,77,499 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (81,10,587 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (73,01,804 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (51,17,825 பேர்) உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com