ஆப்கானிஸ்தான்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தான்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 13 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இங்குள்ள தெக்தாதி மாவட்டத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டரில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 11 பேரும், உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான ஊழியர்கள் 3 பேரும் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்டு, வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 11 ராணுவ வீரர்களும், விமான ஊழியர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். ஒரு ஒரே விமான ஊழியர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

எந்திர கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com