

காபுல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுல் அருகே உள்ள டேஷ் இ பெர்ஷி மாவட்டம் மெஹ்தியா பகுதியில் பள்ளிக்கூட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவ - மாணவியர் 50 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது யார்? எந்த பயங்கரவாத அமைப்பு? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.