16 மாதங்களுக்கு பின்னர்... பிரதமர் மோடியை பார்த்ததும் எழுந்து நின்று டிரம்ப் செய்த செயல்

அவர்கள் இருவரும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நாளை இருதரப்பு ஆலோசனைக்கான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
16 மாதங்களுக்கு பின்னர்... பிரதமர் மோடியை பார்த்ததும் எழுந்து நின்று டிரம்ப் செய்த செயல்
Published on

இவியான்

பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சென்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல்-தானி ஆகியோரும் இவியான் நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

வெள்ளை மாளிகை

இந்த சூழலில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை பார்த்ததும், அமர்ந்திருந்த டிரம்ப் எழுந்து சென்று அவருடன் கைகுலுக்கினார். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து கொண்டனர். அதன்பின்னர் 16 மாதங்களுக்கு பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.

அவர்கள் இருவரும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நாளை இருதரப்பு ஆலோசனைக்கான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். பிரான்ஸ் வருகை பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் இவியான் நகருக்கு வந்துள்ளேன்.

சுவிட்சர்லாந்து

உலக தலைவர்களை சந்தித்து, உலகளாவிய விவகாரங்களை பற்றிய பார்வைகளை பரிமாறி கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார். நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக கூட்டு முயற்சிகளை நவீனப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அதற்கு முன் அவர், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு சென்றார். அவரை ஜெனீவா விமான நிலையத்தில் அந்நாட்டு ஜனாதிபதியான கை பார்மெலின் மற்றும் அவருடைய மனைவி கரோலின் மெரோட்டோ நேரில் சென்று வரவேற்றனர். அதற்கு முன்பு அவர் சுலோவேகியா நாட்டுக்கு சென்றார்.

டிஜிட்டல் தொழில் நுட்பம்

சுலோவேகியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருடைய இந்த பயணத்தின்போது, புலம்பெயர்தல், டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் வகையிலான 11 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com