ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை

தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறுவதற்காக சில ஆபத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை
Published on: 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் சில மோசமான விளைவுகள் ஏற்படுவதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும், அதே நேரத்தில் அதன் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்

பேட்டியில் சாம் ஆல்ட்மேன் கூறியது

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சாம் ஆல்ட்மேன் கூறியதாவது: தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறுவதற்காக சில ஆபத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். ஏ-ஐ பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் வகையில் வைத்திருப்பதும், அதன் பயன்பாட்டில் மக்களுக்கு சுதந்திரம் இருப்பதும் முக்கியம் . ஏஐ தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான ஹேக்கிங், தவறான பயன்பாடு, மோசடி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை தான் ஏற்கமாட்டேன். ஏஐ மூலம் ஏற்படும் பாதிப்புகளை விட, மக்கள் அதைப் பயன்படுத்தி செய்யக்கூடிய நன்மைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும்” என்றார்.

பேரழிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது

மேலும், ஏஐ க்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓபன் ஏஐ-க்கும் அதன் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக ஆல்ட்மேன் தெரிவித்தார். மிகவும் சக்திவாய்ந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஒரே ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை . அதே நேரத்தில், ஏஐ மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பேரழிவு ஆபத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com