

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது.
டோக்கியோ,
ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அனைத்து உள் நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியின் வேகம் மணிக்கு 144 கி.மீ என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, 70 வயதுடைய 3 பேர் பலத்த காற்றினால் காயமடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவில் 240 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுநாள் காலை சீனாவின் கிழக்கு கடற்கரையைச் சென்றடையும் என எதிர்பார்க் கப்படுகிறது.