ஆண்டுக்கு ரூ.1,593 கோடி வருவாய்... பாகிஸ்தானில் தலீபான்கள் அதிரடி; அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு தலீபான்கள் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,593 கோடி வருவாய் ஈட்டுகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.
ஆண்டுக்கு ரூ.1,593 கோடி வருவாய்... பாகிஸ்தானில் தலீபான்கள் அதிரடி; அதிர்ச்சி தகவல்
Published on

லாகூர்,

பாகிஸ்தானின் அரசு உயரதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு குழு கூட்டமொன்றில் பேசும்போது, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான்கள் ஈடுபடுகின்றனர்.

இதன் வழியே அவர்கள் ஆண்டொன்றுக்கு ரூ.1,593 கோடி வருவாய் ஈட்டுகின்றனர் என கூறியுள்ளார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட் உறுப்பினர் முஸ்தபா நவாஸ் கோக்கர் கூறியுள்ளார். இதனை தி நியூஸ் இன்டர்நேசனல் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

அந்நாடு முழுவதும் சன்னி முஸ்லிம் பிரிவுகள், டி.டி.பி. மற்றும் டி.எல்.பி. ஆகிய குழுக்கள் வன்முறை செயல்களை பரப்பி வருகிறது. இதனால், ஷியா உள்ளிட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. பிரிவினைவாத வன்முறை பாகிஸ்தானில் அதிகரித்தும், பரவியும் காணப்படுகிறது.

இதில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 83 ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு டி.டி.பி. குழுக்களே பொறுப்பு என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள தலீபான்கள் உதவி செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com