அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாயினர்.
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
Published on

அல்ஜியர்ஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அவும் அல் புவாஹி மாகாணத்தில் இருக்கும் ராணுவ விமான தளத்தில் இருந்து சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமான தளத்துக்கு அருகிலேயே விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு தலைநகர் அல்ஜியர்சில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விமானத்தில் இருந்த 257 பேரும் பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com