உலகைச் சுற்றி....

அமெரிக்காவின் மிகவும் வயதான முன்னாள் ஜனாதிபதி என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஜிம்மி கார்ட்டர் நேற்று முன்தினம் தனது 96-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
உலகைச் சுற்றி....
Published on

* அமெரிக்காவின் மிகவும் வயதான முன்னாள் ஜனாதிபதி என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஜிம்மி கார்ட்டர் நேற்று முன்தினம் தனது 96-வது பிறந்த நாளை கொண்டாடினார். அமெரிக்க ஜனாதிபதியாக 1977 முதல் 1981 வரையிலான இவரது பதவி காலத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான தூதரக உறவுகள் இயல்பாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான நேரடி விவாதத்தின் வடிவங்களை மாற்ற விவாதத்துக்கான கமிஷன் முடிவு செய்துள்ள நிலையில், அந்த மாறுதல்களை ஏற்கப்போவதில்லை ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 728 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 47 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புடன் ரஷிய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்துக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இறுதி செய்வது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com