உலகைச் சுற்றி...

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படின் மாவட்டத்தில் பயணிகள் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.
உலகைச் சுற்றி...
Published on

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், மோப்டி பிராந்தியத்தில் உள்ள புலானி இனத்தவர்கள் அதிகம் வாழும் ஒக்சாகாகோவ் கிராமத்தில் தோகோன் இனத்தவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் சோமெய்லு மியாகா மற்றும் அவரது மந்திரி சபையில் உள்ள அனைத்து மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

* பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படின் மாவட்டத்தில் பயணிகள் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அயர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள லண்டன்டெய்ரி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்ததால் அங்கு பெரும் கலவரம் வெடித்தது. அப்போது மர்ம நபர்கள் போலீசாரின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பலியானார்.

* தென்னாப்பிரிக்காவின் கவாசூலு நடால் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று புனித வெள்ளியையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com