உலகைச்சுற்றி.....

தைவானில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
உலகைச்சுற்றி.....
Published on

* ஜெர்மனியில் பெர்லின் நகரில் குழந்தைகள் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின்கீழ் 4 பேருக்கு 9 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோவில் நைல் நதியை பார்க்கும் வகையில் அமைந்துள்ள உணவு விடுதியில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெருத்த பொருள்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதற்கு தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஜோசப் வோட்டல் தெரிவித்தார்.

* ஆப்கானிஸ்தானில் நிரப்பத்தக்க அளவில் வெற்றிடம் ஏதும் இல்லை, அந்த நிலம், ஆப்கானிஸ்தான் மக்களுக்கே சொந்தமானது என சீன நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யி உறுதிபட கூறி உள்ளார்.

* தைவானில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு உண்டா என்பது தெரியவில்லை.

* வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த உச்சி மாநாட்டின்போது அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பல விஷயங்களில் இருந்து வந்த இடைவெளி சரி செய்யப்பட்டு உள்ளது, ஆனாலும் இரு தரப்பு உறவு தொடர்பான விஷயங்களில் சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதிருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com