

* பாகிஸ்தான் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் எல்லை தாண்டிச்சென்று மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லாந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், அர்ஜென்டினா நாட்டுக்கு ஜி-20 உச்சி மாநாட்டுக்காக புறப்பட்டு சென்ற விமானம், தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக கொலோன் நகரில் (ஜெர்மனி) தரை இறங்கியது. அந்த விமானம், பத்திரமாக தரை இறங்கி விட்டதால் அவர் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினார்.
* சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுகிற நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
* ரஷியாவில் 3 ராணுவ செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ரோக்காட் என்ற ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
* அர்ஜென்டினாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்து நடத்தவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டு விட்டது. இது குறித்து மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகைக்கு அமெரிக்காவின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்து விட்டது.
* ஹாங்காங்கில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.