பொலிவியா நாட்டு சிறையில் போலீசாருடனான மோதலில் 6 கைதிகள் பலி

பொலிவியா நாட்டில் சிறையில் போலீசாருடனான மோதலில் 6 கைதிகள் பலியாகினர்.
பொலிவியா நாட்டு சிறையில் போலீசாருடனான மோதலில் 6 கைதிகள் பலி
Published on

லாபஸ்,

பொலிவியாவில் சான்டா குரூஸ் நகரில் பல்மசோலா சிறைச்சாலை உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துப்பாக்கிகள், கொக்கைன் மற்றும் மரிஜுவானா போன்ற போதை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சிறைச்சாலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 5 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். அவர்கள் போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 6 போலீசார் சுடப்பட்டு காயமடைந்தனர். சிறை கைதிகளில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2013ம் ஆண்டு கைதிகளுக்கு இடையேயான மோதலில் 34 பேர் சிறையில் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com