இத்தாலியில் இருந்து வங்காளதேசம் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


இத்தாலியில் இருந்து வங்காளதேசம் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

ANI

Monisha 22 Jan 2025 6:27 PM IST
t-max-icont-min-icon

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்கா,

இத்தாலியின் ரோம் நகரிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு வரும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், ரோமில் இருந்து டாக்கா வரும் பிஜி-356 விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று விமான நிலைய நிர்வாக இயக்குனர் கம்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானம் காலை 9.20 மணிக்கு ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்த 250 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனை செய்தனர். இச்சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஹஸ்ரத் ஷாஜலால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story