ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் - ஜோ பைடன்

ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பிரஸ்ஸல்ஸ்,

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேட்டோ நாடுகளின் அவசர உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ரஷிய உயரடுக்குகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகளின் புதிய தொகுப்பை அறிவித்தார்.

மாநாட்டிற்கு பிறகு பேசிய ஜோ பைடன், உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரசாயன அல்லது அணுசக்தி ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடர்பாக நேட்டோவின் தொடர்ச்சியான அவசர கூட்டங்களைத் தொடர்ந்து பைடன் இந்த கருத்தினை தெரிவித்தார். ஜி-20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உறுப்புகளாக கொண்ட ஒரு அமைப்பு ஆகும்.

ரஷியாவை ஜி-20 அமைப்பில் இருந்து நீக்குவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷியாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com