வியட்நாம்: படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலி

ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம்.
வியட்நாம்: படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலி
Published on

ஹனோய்,

ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தியர்கள்

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

படகு விபத்து

படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும், இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகபிரபு என்பது தெரியவந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com