டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்


டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
x

கோப்புப்படம்

இந்த சம்பவம் விமானத்தில் பயணித்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

பூகெட்,

தாய்லாந்தின் பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 8 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குளியலறை ஒன்றின் சுவரில் டெல்லி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மிரட்டல் குறித்து விமான பைலட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, பாதுகாப்புப் பணியாளர்கள் 156 பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். மிரட்டல் குறித்து தகவறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று விமானத்தில் சோதனை நடத்தினர்.

இந்த தீவிர சோதனையை அடுத்து விமானத்தில் எந்த வெடி குண்டும் இல்லை எனவும் இது புரளி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் விமானத்தில் பயணித்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

1 More update

Next Story