ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள்.
ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
Published on

மாஸ்கோ,

ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பேருந்து பயணித்த போது பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com