

இஸ்லமாபாத்,
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பஸ் ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தானில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. அதிவேகம், போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாதது, ஓட்டுநர் சோர்வு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.